Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் விவகாரம்: சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட பலஸ்தீனம் நடவடிக்கை

In உலகம்
Published: 06:07 GMT, Dec 4, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Suganthini
pal

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரிப்பதை தடுக்கும் நோக்கில், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ், சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்துக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் ஆகியோர் உட்பட உலகத் தலைவர்களை, பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரிக்கும் நோக்கில், அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானதெனவும், அபாஸின் ஆலோசகர் மஜிட் அல் ஹாலிதி (Majdi al-Khalidi) கூறியுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியாகியது. இந்நிலையிலேயே, சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ் முற்பட்டு வருகின்றார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)