Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஹிப்புயலால் அனர்த்தத்திற்கு உள்ளான மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

In இந்தியா
Published: 06:51 GMT, Dec 4, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : JudeDanish

ஒஹிப் புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள ளை மீட்கும் பணிகளை இந்திய கடற்படை, விமானப் படை, கரையோரப் பாதுகாப்பு படை என்பன துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த வாரம் இந்தியாவின் கன்னியாக்குமரி மாவட்டத்தை ஒஹிப் புயல் தாக்கியதில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாது அனர்த்தத்திற்குள் சிக்கியிருந்த நிலையில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கபட்;டுவருகின்றன.

கடலில் சிக்கியுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் கடல் கரையில் தங்கி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் மத்தியரசு துரிதமாக மீட்புப் பணிக்கு உத்தரவிட்;டுள்ளது.
அந்த வகையில் கடற்படைக்குச் சொந்தமான 10 கப்பல்கள், எட்டு ஹெலிகப்படர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதேவேளை கன்னியாகுமரி பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.

இதேவேளை மீனவ குடும்பங்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். ஒஹிப் புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் 14 உயிரிந்துள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை 357 மீனவர்களை கடலில் இருந்து மீட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg