Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் முதலீடு செய்ய வரவேற்கின்றோம் – மேயர்

In
Published: 06:52 GMT, Dec 4, 2017 |
0 Comments
1260
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ள போதிலும், வர்த்தக நடவடிக்கையில் முதலீடுகளைச் செய்வதற்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கும் லண்டனில் முன்னுரிமை வழங்கப்படுமென, லண்டன் மேயர் சாதிக் ஹான் (Sadiq Khan) தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சாதிக் ஹான், இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, இதனைக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘மும்பையும் லண்டனும் ஒன்றாக இணைந்து ஒத்துழைப்பதன் மூலம், பாரிய இலாபம் அடைய முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கலாசார உறவை மேம்படுத்தும் நோக்கிலும், வர்த்தக நடவடிக்கையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை சாதிக் ஹான் மேற்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg