Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புல்லட் ரயில் வேண்டாம் என்றால் மாட்டுவண்டியில் போங்கள்: மோடி

In இந்தியா
Updated: 08:35 GMT, Dec 4, 2017 | Published: 07:00 GMT, Dec 4, 2017 |
0 Comments
1689
This post was written by : Puvanes

புல்லட் ரயில் திட்டத்தினை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்யட்டும் அதில் எனக்கு எந்தவித கவலையும் இல்லை என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று அகமதாபாத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

புல்லட் ரயில் திட்டத்தினால் குஜராத்தில் பெருந்தொகையான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன அந்தவகை திட்டத்தினை காங்கிரஸ் எதிர்த்து வருகின்றது அதற்கு என்னால் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

குஜராத் கடல்பகுதியில் 1300இற்கும் அதிக சிறு தீவுகள் உள்ளன, அவை அனைத்தும் சிங்கப்பூரை விடவும் அளவில் பெரியன. அவை அனைத்தையும் சிங்கப்பூர் போல மாற்றும் திட்டங்கள் உள்ளன.

எதிர்காலத்தில் குஜராத்தை சிறந்த மாநிலமாக மாற்றும் திட்டம் உள்ளது அதனால் பா.ஜ.கவிற்கு அனைவரும் வாக்களித்து எம்மை பெற்றிபெறச்செய்யுங்கள் எனவும் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 9 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள குஜராத் சட்டசபைத் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துவரும் நிலையில் அனைத்து கட்சிகளும், பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg