Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். நாகவிகாரை திருவிழா!

In ஆன்மீகம்
Published: 07:09 GMT, Dec 4, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Risha

சமாதானத்தின் பின்னர் நாட்டின் நல்லிணக்கத்தின் ஊடாக மக்களுடைய வெளிப்பாடு எனும் கருப்பொருளில் போயா தின பெரஹெர நிகழ்வு யாழ் நாக விகாரையில் நடைபெற்றது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஐர் nஐனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

யாழ். பண்ணை திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பமாகிய பெரஹெர, அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக பலாலி வீதி வழியாக, யாழ். நாக விகாரையை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் யாழ். இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஐன், வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, பொலிஸ்- இராணுவ உயர்அதிகாரிகள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg