Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி ஆக்கிரமிப்பு- மலையகத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

In இலங்கை
Updated: 11:24 GMT, Dec 4, 2017 | Published: 08:06 GMT, Dec 4, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Risha

காணி ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத் தொழிலாளர்களால், தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

லிந்துலை பெயார்வெல் தோட்ட நபர் ஒருவர் லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து கடையொன்றை அமைத்துள்ள நிலையிலேயே, தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லிந்துலை பெயார்வெல் தோட்ட நபர் ஒருவர் லோகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து கடையொன்றை அமைத்துள்ளார்.

தற்காலிக வியாபாரத்திற்காக ஆக்கிரமித்துள்ள கடை அமைந்துள்ள பகுதிக்கு மின்சாரம் பெற்று, எல்லை வேலி அமைத்து குறித்த பகுதியை அவர் சொந்தமாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவண்ணமும், கோஷங்களை எழுப்பியவாறும் வீதியோரத்தில் இடம்பெற்ற போராட்டம் சுமார் 3 மணிநேரம்வரை நீடித்திருந்தது.

DSC00415 DSC00405 DSC00415

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)