Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூதாகரமாகும் ஜெயா விவகாரம்: அண்ணன் கூறும் புதுத்தகவல்!

In இந்தியா
Updated: 09:40 GMT, Dec 4, 2017 | Published: 08:08 GMT, Dec 4, 2017 |
0 Comments
1831
icon_com
This post was written by : Puvanes
jeya001

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை என ஜெயலலிதாவின் அண்ணன் உறவு எனப்படும் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

மைசூர் – ஸ்ரீரங்கபுராவில் வசித்து வரும் வாசுதேவன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மை ஐதராபாத்தில் வைத்து அந்தக் குழந்தையை காப்பாற்றினார்கள் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்தக் குழந்தை எங்கே? யார் என்ற விபரம் எனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்த விடயம் சசிகலாவிற்றும், நடராஜனுக்கும் ஏற்கனவே தெரியும் எனக் குறிப்பிட்ட வாசுதேவன், அவருக்கு சென்னையில் வைத்து குழந்தை பிறந்து என்பது பொய்யான செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதேநாளில் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக விமர்சிக்கப்பட்டு வந்தன ஆனால் இப்போது அவரது குழந்தைகள் தொடர்பாக பேசி வருகின்றனர் எனவும் வாசுதேவன் மேலும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணமடைந்த போது “எனது தந்தையின் இரண்டாவது மனைவியின் புதல்வியாக இருந்தாலும் ஜெயலலிதாவை என் சொந்த சகோதரியாகவே நினைத்தேன்” என வாசுதேவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெங்களூரைச் சேர்ந்த அமிருதா எனப்படும் பெண், ஜெயலலிதாவே தனது தாய் எனக் கூறி வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த விடயங்கள் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துவருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg