Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

In சினிமா
Updated: 08:32 GMT, Dec 4, 2017 | Published: 08:32 GMT, Dec 4, 2017 |
0 Comments
1363
This post was written by : Surenth

விளம்பரத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களில் தான் நடிக்க மாட்டேன் எனவும் தான் நடிக்கும் விளம்பர திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதே தன்னுடைய இலக்கு எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தனி ஒருவன் திரைப்படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகி மோகன் ராஜாவுக்கு தொலைபேசி செய்து நாமும் இது போன்று திரைப்படம் பண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசினேன். அவரும் சரி என்று சொன்னார்.

விளம்பரத்திற்காக எடுக்கும் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன். நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு சிறு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறேன். என்னை நல்ல மனிதனாக மாற்றிய திரைப்படம் இது. இந்தத் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg