Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாமுவேல் உம்திதி எட்டு வாரங்கள் ஓய்வு: பார்சிலோனா அணிக்கு பாரிய இழப்பு

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:28 GMT, Dec 4, 2017 | Published: 08:28 GMT, Dec 4, 2017 |
0 Comments
1187
This post was written by : Anojkiyan

பார்சிலோனா கால்பந்து கழக அணியின் பிரபல தடுப்பாட்டக்காரர் சாமுவேல் உம்திதி, எதிர்வரும் எட்டு வாரங்கள் அணிக்காக விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்சிலோனா மற்றும் செல்டா விகோ அணிகளுக்கிடையிலான போட்டியின்போது பார்சிலோனா அணியின் முன்னணி தடுப்பு ஆட்டக்காரர் சாமுவேல் உம்திதி-க்கு வலது கால் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்தக் காயம் வீரியமுள்ளதாக இருப்பதால் அவர் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் உம்திதி ஓய்வில் இருக்க தீர்மானித்துள்ளார்.

லா லிகாவின் முக்கியமான போட்டியாக கருதப்படும் ரியல் மெட்ரிட் அணிக்கெதிரான எல் கிளாஸிகோ போட்டியில், உம்திதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள இப்போட்டியில் உம்திதி இல்லாதது பார்சிலோனா அணிக்கு பாரிய இழப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg