Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் பணியில் ஈடுபடவில்லை: தினகரன்

In இந்தியா
Published: 08:35 GMT, Dec 4, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Puvanes
thinagaran001

அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் மக்கள் நலன்களில் ஈடுபடாமல் பொய்களைக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஓஹி புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரிமாவட்டத்தைப் இன்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது புயல் தாக்கி 6 நாட்களும் கடந்து விட்டது ஆனால் இன்றளவும் எந்தவொரு நிவாரணப்பணிகளும் இங்கு முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆடம்ப விழாக்களை நடத்துவதிலும் தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து கொள்வதிலும் மட்டுமே தமிழக அரசியல்வாதிகள் மும்பரமாக செயற்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்ட தினகரன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை முன்னெடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் இலாப நடவடிக்கைகளை விடுத்துவிட்டு பொதுமக்களின் சேவைகளில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஈடுபடவேண்டும் எனக் குறிப்பிட்ட தினகரன், வெள்ள நிவாரணப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் முறையாக முன்னெடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)