Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தை தாமதமடைவதை விரும்பவில்லை – அயர்லாந்து

In
Published: 08:42 GMT, Dec 4, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Suganthini
ire

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தாமதமடைவதை விரும்பவில்லையென, அயர்லாந்து உப பிரதமர் சைமன் கொவின் (Simon Coveney) தெரிவித்துள்ளார்.

மேலும்,  அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக போதியளவான யோசனைகள் முன்வைக்கப்படவில்லையெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக தாம் முழு விவரத்தை தேடவில்லையென்ற போதிலும், ஒரு தீர்வைக் காண வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தையில், பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியுமென்ற சூழ்நிலைக்கு மத்தியில், இவரது இந்தக் கருத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிவந்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஜீன் க்குளோட் ஜங்கருக்குமிடையிலான சந்திப்பு பிரஸ்ஸல்ஸில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகின்றது. குடியுரிமை, விவகாரத்துச் சட்டமூலம், அயர்லாந்து எல்லை பிரச்சினை ஆகியவை தொடர்பாக மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)