Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் தமிழ்க் கொலையுடன் சான்றிதழ்!

In இலங்கை
Updated: 11:51 GMT, Dec 4, 2017 | Published: 08:44 GMT, Dec 4, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : JudeDanish
IMG_0514

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான குறித்த திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து நடத்தும் பண்பாட்டு விழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழை காணப்பட்டமை குறித்து கலைஞர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கும் விருதுகளில் பெயர் மாறிப் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் பலரும் மீண்டும் விருதுகளை கலாசார உத்தியோகத்தரிடம் ஒப்படைத்து விட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)