Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகைகளுக்கு சிம்புவை பிடிக்காது : மைக்கேல் ராயப்பன்

In சினிமா
Updated: 10:47 GMT, Dec 4, 2017 | Published: 09:08 GMT, Dec 4, 2017 |
0 Comments
1859
icon_com
This post was written by : Surenth
1475759854_simbu-aaa

நடிகர் சிம்புவுடன் நடிக்க நடிகைகள் விரும்பவில்லை எனவும் நடிகைகளுக்கு சிம்புவை பிடிக்காது எனவும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் சிம்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அவர் இது குறித்த கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எந்த ஒரு நடிகையும் கதாநாயகியாக சிம்புவுடன் நடிக்க தயாராக இல்லை. முதலில் த்ரிஷா நடிக்க வாங்கிய முற்பணத்தையும் தொகையை திருப்பி தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சினில் சந்தித்து இது குறித்த கேட்ட போது அவரும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா ஒப்புக் கொண்டார்.

முதல் நிகழ்ச்சிநிரல் முடிந்த பிறகு அதே தோற்றத்தில் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அவர் ஸ்ரேயாவுடன் மீண்டும் நடிக்க விரும்பாத காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை இதனால் அவர் வரவில்லை. ஒரு வழியாக இயக்குநர் கதறி அழுது ஒரு மணி நேரம் தாருங்கள் 8 காட்சிகள் தான் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி எடுத்தோம். என மைக்கேல் ராயப்பன் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)