Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம்: இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வலியுறுத்து

In
Published: 09:10 GMT, Dec 4, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini
ukk

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அவசியமென்று பிரித்தானியப் பிரஜைகளில் அரைவாசிப் பேர் வலியுறுத்தியுள்ளதாக கருத்துக்கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Survation எனும் நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பிலேயே, இது தொடர்பாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தக் கருத்துக்கணிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை எட்ட வேண்டுமென்று பிரித்தானியப் பிரஜைகளில்  அரைவாசிப்பேர் விரும்புகின்றனர்.

எனவே, பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று 50 சதவீதமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு 34 சதவீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)