Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

In இலங்கை
Updated: 09:21 GMT, Dec 4, 2017 | Published: 09:21 GMT, Dec 4, 2017 |
0 Comments
1230
icon_com
This post was written by : Risha
March 12 move

புதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமொன்று ஏறாவூரில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

தேர்தல் முன்னெடுப்புகளில் பொதுமக்களின் முழுமையான பங்குபற்றுதலின் அவசியத்தை வலியுறுத்தி இவ்விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மார்ச் 12 ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தினால் வெளியிடப்பட்ட ‘புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்’ சிந்தியுங்கள், அணிசேருங்கள், செயற்படுங்கள்’ என்ற கையேடுகளும் விநியோகிக்கப்பட்டன.

குறித்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கட்சிக்காரராக அல்லாமல் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் சிந்தியுங்கள், தனியாகவும் கூட்டாகவும் அணிசேருங்கள், நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயற்படுங்கள்’ என்றும் பிரதேச நகர மாநகர சபைக்கு கட்சி மற்றும் நிறத்தைப் பற்றிக் கருத்திற் கொள்ளாது பொருத்தமானவர்களை மாத்திரமே தெரிவு செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சி பேதமின்றி உங்கள் பிரதேசத்திற்குத் தகுதியானவர்களை மட்டும் நியமித்துக் கொள்ள செயற்படுங்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதை சாதகமாக்கிக் கொள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள பெண்களைப் பட்டியலில் உள்ளடக்குமாறு தலைமைத்துவத்தை வலியுறுத்துங்கள்.

கட்சி பேதமின்றி பிரதேசத்தின் நலன்கருதி செயற்படக் கூடியவருக்கு ஆதரவை வழங்குங்கள், ஊழல் பேர்வழிகளை எதிர்த்து நில்லுங்கள், தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்யுமாறு கட்சியை வலியுறுத்துங்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mar DSC00822

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)