Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: ராகுல் காந்தி

In இந்தியா
Updated: 09:19 GMT, Dec 4, 2017 | Published: 09:19 GMT, Dec 4, 2017 |
0 Comments
1215
This post was written by : Puvanes

பா.ஜ.கவானது குஜராத் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

குஜராத்தில் காஸ்கிரஸ் கட்சி நேற்று முன்னெடுத்த பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குஜராத்தில் 22 வருடங்களாக பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டு வருகின்றது ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய ராகுல், குறிப்பாக பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் பா.ஜ.க நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பெண்கள் சுரண்டப்பட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்படுவது இல்லை அதேபோல கல்வி மற்றும் ஊட்டச்சத்து போன்ற அடிப்படைகள் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்திற்கு பா.ஜ.க வெறும் வாய்ச்சொல் வாக்குறுதிகளை மட்டுமே தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளது எனவும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குஜராத் சட்டசபைத் தேர்தல் அண்மிப்பதன் காரணமாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று கடுமையாக விமர்சித்துக்கொண்டு வருகின்றன என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg