Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை: பிரதமர்

In இலங்கை
Updated: 10:56 GMT, Dec 4, 2017 | Published: 09:35 GMT, Dec 4, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Ravivarman
ranil

ஊடகவியலாளர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு விரோதமானவையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. கடந்தகால ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன. அவர்களுக்கு எதிரான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

2005, 2015 காலப்பகுதியில் இலங்கையில் லசந்த விக்ரமதுங்கவுடன் சேர்த்து 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போதைய ஆட்சியில் இந்நிலைமை மாறியிருக்கின்றது.

ஊடகவியலாளர்களின் கருத்திற்கு மதிப்பளித்து அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)