Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் தாமரை மலரும்: தமிழிசை உறுதி

In இந்தியா
Updated: 11:22 GMT, Dec 4, 2017 | Published: 09:50 GMT, Dec 4, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Puvanes
thamilisai001

உத்திர பிரதேசத்தினைப் போன்று தமிழகமும் தாமரையாக மலர்வது உறுதி என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், பலதரப்பட்ட அரசியல் வியூகங்களுக்கு முற்றுப்புள்ளிளை ஏற்படுத்தவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுகின்றது எனக் கூறிய அவர், பா.ஜ.கவிற்கு இடைத்தேர்தல் என்பது புதிதல்ல பல தேர்தல்களை அது சந்தித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் பலர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு சோதனைக்களமாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எந்தவித குறைபாடும் இல்லாமல் நாம் தேர்தலை சந்திக்கின்றோம் எனவும் தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல விஷால் பல சுயேட்சை வேட்பாளர்களைப் போல ஒருவர்தான் எனச் சுட்டிக்காட்டிய அவர் ஊழலற்ற கட்சி எனச்சொல்லக்கூடிய தகுதி பா.ஜ.கவிற்கு மட்டுமே உள்ளது எனவும் தமிழிசை மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)