Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெப்.17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல்!

In இலங்கை
Published: 09:53 GMT, Dec 4, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றுவரை 248 உள்ளூராட்சி சபைகளில் வேட்பு மனுக்களை வெளியிடுவதற்கு எந்தவித தடைகளும் இல்லை. 97 சபைகளில் இருந்த அச்சுப் பிழைகள் காரணமாக மீண்டும் குறித்த சபைகளை வர்த்தமானியில் உள்ளிட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், அவை கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் தினம் ஞாயிறு அல்லது அரச விடுமுறையாக அல்லாத ஒரு தினத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தலுக்கு 75 நாட்கள் உள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் பரீட்சைகளில் தோற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுவதுடன், வாகனப்பேரணி மற்றும் மக்கள் பேரணிகளை நடத்துவதற்கு அனுமதியில்லை” என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg