Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மண்ணில் மத்தியூஸ்-சந்திமால் புதிய சாதனை!

In கிாிக்கட்
Updated: 12:06 GMT, Dec 4, 2017 | Published: 10:21 GMT, Dec 4, 2017 |
0 Comments
2980
icon_com
This post was written by : Anojkiyan
prv_1512368516

இலங்கை அணியின் வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இந்திய மண்ணில் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர்.

இந்திய மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த வீரர்கள் என்ற இங்கிலாந்து வீர்களின் சாதனையை இவ் இருவரும் தகர்த்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்களான ஜொனதான் ட்ரோட் மற்றும் இயன் பெல் ஆகியோர் அதிகப்படியான 470 பந்துகளை சந்தித்ததே இந்திய மண்ணில் கடந்த 5 ஆண்டுகளுக்கான சாதனையாகும்.

இந்த சாதனையை நடப்பு டெஸ்ட்டில் 477 பந்துகளை சந்தித்த மத்தியூஸ் மற்றும் சந்திமால் ஜோடி தகர்த்துள்ளது.

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணி தற்போது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவருகின்றது. 4வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இருவரும், 477 பந்துகளை எதிர்கொண்டு 181 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இறுதியில் அஸ்வின் பந்துவீச்சில் மத்தியூஸ் 111 ஓட்டங்களை பெற்றநிலையில் விக்கெட் காப்பாளர் சஹாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அவர்களின் வலுவான இணைப்பாட்டம் பிரிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)