Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு சீனா கவலை

In
Published: 10:14 GMT, Dec 4, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Suganthini

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் நிலவும் பதற்றமான நிலைமை கவலையடையச் செய்துள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள மொங்கோலிய வெளிவிவகார அமைச்சர் DAMDIN TSOGTBAATAR,   சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இவர்கள் இருவரும் வடகொரியா விவகாரம் தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, சீன வெளிவிவகார அமைச்சர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கொரிய தீபகற்பத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான சூழ்நிலை நிலவிவந்தது. இருப்பினும்,  கொரிய தீபகற்பத்தில் மீண்டும்   பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. இதனை எண்ணி சீனா கவலையடைகின்றது’ என்றார்.

மேலும், ‘வடகொரியாவின் அணுவாயுதச் சோதiனையத் தொடர்ந்து, வடகொரியா மீது முன்வைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை அந்நாடு அலட்சியம் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதன்   மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதையே சீனா வலியுறுத்துகின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுவரும் வடகொரியா, கடைசியாக கடந்த செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆறாவது சக்திவாய்ந்த அணுவாயுதச் சோதனையை  நடத்தியதுடன், அம்மாதமே ஏவுகணைச் சோதனையொன்றையும் நடத்தியிருந்தது. இதனையடுத்து, கடந்த நொவம்பர் மாதம் 29ஆம் திகதி புதிய வகையான ஏவுகணைச் சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)