Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியாவின் முன்னாள் தலைவரிடம் விசாரணை

In
Published: 10:33 GMT, Dec 4, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Suganthini

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont), பெல்ஜியத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு முகங்கொடுக்கின்றார்.

கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனக் கோரிக்கையை அடுத்து, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கார்லெஸ் புகிடமொன்ட் சிக்கியுள்ளார். இந்நிலையில், அவர் நாடு திரும்ப வேண்டுமென, ஸ்பெய்ன் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்நிலையிலேயே, அவர் நாடு கடத்தப்படும் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, இதற்கு ஆதரவாக 90 சதவீதமான வாக்குகள் கிடைத்திருந்தன. இதனையடுத்து, சுதந்திரப் பிரகடன அறிவிப்பை கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் அறிவித்திருந்தார்.

கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடன அறிவிப்பை ஏற்க விரும்பாத ஸ்பெய்ன் அரசாங்கம், கற்றலோனியாவை தமது நேரடிக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததுடன், இம்மாதம் 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தது. அத்துடன், கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் உட்பட பிரிவினைவாதத் தலைவர்களையும் பதவியிலிருந்து நீக்கியது.

இவ்வாறான சூழ்நிலையில், கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் உட்பட பிரிவினைவாதத் தலைவர்கள் நால்வர் பெல்ஜியத்துக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)