Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இந்தியா தீர்மானம்!

In அறிவியல்
Published: 10:40 GMT, Dec 4, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Puvanes
moon001

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாக சந்திராயன் 2 என்ற திட்டத்தினை இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு முன்னெடுக்கவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்பகட்டமாக நிலவு தொடர்பில் புதிய ஆய்வுகளை இஸ்ரோ நிறுவனம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளது.

நிலவு தொடர்பில் பல்வேறுபட்ட மர்மங்கள் தொடர்ந்தவாரே இருக்கின்றன. குறிப்பாக நிலவு வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பிடம் எனவும் மேலைத்தேய ஊடகங்கள் மர்மங்கள் கூடிய செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நிலவு தொடர்பாக முன்னெடுக்கப்படும் சந்திராயன் 2 திட்டமானது நிலவு ஆய்வுகளின் மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் சந்திராயன் நிலவுத் திட்டம் வெற்றியளித்தது. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் விண்கலத்தோடு சிறிய அளவிலான ரோபோக்களையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தற்போது இதன் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுகளில் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப முடியும் எனவும் குறித்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)