Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ சிறைச் சாலைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்!

In கனடா
Updated: 11:06 GMT, Dec 4, 2017 | Published: 11:06 GMT, Dec 4, 2017 |
0 Comments
1088
This post was written by : Anojkiyan

ஒன்ராறியோ சிறைச் சாலைகளில் பல மில்லியன் டொலர்கள் செலவில், உயர் தொழில்நுட்பத்திலான உடற் பரிசோதனை கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், தடை செய்யப்பட்ட ஆயுத வகைகளின் பயன்பாடு இன்னமும் அங்கு காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ரொறன்ரோ கிழக்கு சிறைச்சாலை அதிகாரி, “சிறைச் சாலைக்கு புதிதாக உள்வரும் கைதிகள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏற்கனவே உள்ளே இருக்கும் கைதிகள், பல இடங்களிலும் இவ்வாறான ஆயுதங்களை ஒழித்து வைத்திருக்க கூடும்.
இந்த ஆயுதங்களால் சிறைக் கைதிகளும், சிறை அலுவலர்களும் காயங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என கூறினார்.

கடந்த புதன்கிழமை ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலை ஒன்றில், வெட்டப்பட்ட சம்பவம் இதற்கு சிறந்த சான்று ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg