Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத் திட்டத்தைப் பாராட்டிய ஜனாதிபதி!

In இலங்கை
Updated: 11:01 GMT, Dec 4, 2017 | Published: 11:01 GMT, Dec 4, 2017 |
0 Comments
1359
This post was written by : Ravivarman

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, “இம்முறை வரவு செலவுத்திட்டம் சிறந்த அபிவிருத்தியின் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும். தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் இலவச சுகாதார சேவையையும், இலவச கல்வியையும் உறுதிப்படுத்தச் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இலவசக் கல்வியை உறுதிப்படுத்த முடிந்துள்ளதுடன் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் கடந்த 3 ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன்,ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்தியசாலை எதிர்வரும் வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg