Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஒப்பந்தத்தில் பிரச்சினை இல்லையென்பதை பிரான்ஸ் தெரிந்திருக்க வலியுறுத்து

In உலகம்
Published: 11:02 GMT, Dec 4, 2017 |
0 Comments
1201
This post was written by : Suganthini
iran

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம், பிரச்சினைக்குரிய விடயம் அல்லவென்பதை முதலில் பிரான்ஸ் தெரிந்திருக்க வேண்டுமென, ஈரான் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

லெபனானில்  ஊடகமொன்றுக்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம், பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய பிரச்சினையான விடயம் அல்லவென்பதை பிரான்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்றார்.

‘ஈரானின் அணுசக்தித்திட்ட விடயம் தொடர்பாக கலந்துரையாட விரும்பும் பிரான்ஸ் அதிகாரிகளும் ஏனைய அதிகாரிகளும், கடந்த தசாப்தத்தில் இப்பகுதியில் கடந்துவந்த ஆழமான முன்னேற்றங்கள், மற்றும் கடந்த காலத்துக்கும் தற்போதைய சூழ்நிலைக்குமிடையிலுள்ள வித்தியாசங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

எனவே, ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் அரசாங்கம் நிச்சயமாகப் பேச்சுவார்த்தை நடத்தாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அதன் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டுமென்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த மாதம் கூறியிருந்தார். இதனையடுத்தே, ஈரான் வெளிவிவகார அமைச்சின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg