Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பண்பாட்டு பெருவிழா: ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

In இலங்கை
Updated: 12:37 GMT, Dec 4, 2017 | Published: 11:37 GMT, Dec 4, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Risha

வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பண்பாட்டு பெருவிழாவில் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும், வவுனியா பிரதேச செயலகமும், வவுனியா மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து குறித்த நிகழ்வை நடத்தியது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதானபத்திரன தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, வவுனியா மாவட்டத்தின் கலை இலக்கிய பணிகளுக்கு ஆற்றிவரும் சேவைகளை பாராட்டும் முகமாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் எம்.ஜி.ரெட்ணகாந்தன் ‘வவுனியம் முதிர் கலை இளவல்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை, வவுனியாவின் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகர், தமிழ் மணி அகளங்கன் மற்றும் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் நடன ஆசிரியர் சூரியயாழினி வீரசிங்கம் ஆகியோருக்கு ஏற்கனவே மத்திய கல்வி, விளையாட்டுத்துறை பண்பாட்டு அலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர்கள் விருதை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.

அத்துடன் வவுனியா ஊடகவியலாளர்களான உப்புல் பாலசூரிய மற்றும் பந்துல செனவிரத்தின ஆகியோருக்கு சிறந்த ஒளிப்படப்பிடிப்பாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, டி.ஜயதிலக மற்றும் கலைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)