Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோமேனியா-பல்கேரியா நாட்டு மக்களுக்கு நுளைவிசைவு தேவையில்லை: கனேடிய அரசு அறிவிப்பு

In கனடா
Published: 11:27 GMT, Dec 4, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Anojkiyan
Bulgaria-Romania-talks-with-Canada-on-visa-free-travel

ரோமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் நுளைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க முடியும் என கனடா தெரிவித்துள்ளது.

குறிப்பாக வர்த்தக பயணங்களை மேற்கொள்வோர், தமது குடும்பத்தார் நண்பர்களை பார்ப்பதற்காக கனடாவுக்கு வருவோர் மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர், ஆறு மாதங்களுக்கும் குறைவான குறுகிய கால பயணங்களுக்கு கனடாவின் நுளைவிசைவினை முற்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நுளைவிசைவு தேவையற்ற ஏனைய நாடுகளைச் சேர்நதவர்களைப் போலவே, ரோமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் தமது பயணத்தின்போது ஈ.டி.ஏ எனப்படும் இலத்திரனியல் பயண அனுமதி ஆவணத்தினை கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

இவ்வாறான ஆவணங்களை அவர்கள் தமது பயணத்திற்கு முன்னரே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதனால், குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், கனடாவுக்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே அது குறித்த விபரங்களை அதிகாரிகள் பரிசோதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)