Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனியா பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு பிணை

In
Published: 11:31 GMT, Dec 4, 2017 |
0 Comments
1037
icon_com
This post was written by : Suganthini
gavel

தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட கற்றலோனியாவின் பிரிவினைவாதத் தலைவர்களில் 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, மேற்படி 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சம் யூரோ பெறுமதியான ரொக்கப்பிணையில் மேற்படி 6 பேரும்  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கற்றோலோனியாவின் முன்னாள் உப தலைவர் Oriol Junqueras மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் Joaquim Forn  ஆகியோருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக, ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg