Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டே நாளில் உருவான The Second Face: இது ஜோயலின் புதிய முயற்சி

In
Updated: 11:39 GMT, Dec 4, 2017 | Published: 11:38 GMT, Dec 4, 2017 |
0 Comments
1451
This post was written by : Anojkiyan

இளம் இயக்குனர் ஜோயல் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய குறுந்திரைப்படம் The Second Face.

முற்றுமுழுதாக கைப்பேசியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் திருகோணமலை வளாகத்தின் முதலாம் வருட மாணவர்கள் நடித்துள்ளனர்.

வெறும் இரண்டே நாட்களில் தயாரிக்கப்பட்ட இக்குறுந்திரைப்படம் மக்களுக்கு கருத்தொன்றை சொல்லிவிட்டு போவது மட்டுமல்லாமல் விருதுக்குரிய படமாகவும் உருவெடுத்துள்ளது.

யதார்த்தமான படங்களை அள்ளிக்கொடுத்த இயக்குனர் ஜோயலுக்கு, இந்த புதிய முயற்சியும் வெற்றியளித்துள்ளது என்றே கூறவேண்டும்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனால், நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டியில், இப்படம் முதலிடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg