Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்தியூஸ்-சந்திமால் சதம்: மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு

In கிாிக்கட்
Updated: 12:05 GMT, Dec 4, 2017 | Published: 12:05 GMT, Dec 4, 2017 |
0 Comments
1927
This post was written by : Anojkiyan

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய (திங்கட்கிழமை) ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் தினேஷ் சந்திமால் 147 ஓட்டங்களுடனும், சந்தகன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், களத்தில் இருந்தனர்.

கடும் நெருக்கடியில் இருந்த இலங்கை அணியை அஞ்சலோ மத்தியூஸ் தனது சதத்தின் மூலம் வலுப்பெற செய்தார்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்க 536 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg