Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு-கிழக்கு கரையோரப் பிரதேச மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

In இலங்கை
Updated: 12:17 GMT, Dec 4, 2017 | Published: 12:17 GMT, Dec 4, 2017 |
0 Comments
2184
This post was written by : Ravivarman

வடக்கு – கிழக்கு கரையோரக் கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்வுகூறப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சீரற்ற காலநிலையை கரையோரப் பிரதேசத்திலுள்ள மக்களும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்படி அறிவுறுத்தல்களைப் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் ஊடாக சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், முல்லைத்தீவுப் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும் இவ்வாறான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg