Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் தொடர்: வலுவான நிலையில் அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Published: 12:27 GMT, Dec 4, 2017 |
0 Comments
1259
icon_com
This post was written by : Anojkiyan
tet

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், இரண்டாவது    டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் அவுஸ்ரேலிய அணி 268 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டநேர முடிவில் நாதன் லியோன் 3 ஓட்டங்களையும், பீட்டர் ஹென்ஸ்கோப் 3 ஓட்டங்களையும் பெற்று களத்தில் இருந்தனர்.

கடந்த 2ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 442 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 215 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள அவுஸ்ரேலிய அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)