Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணி அபகரிப்பிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

In
Published: 14:29 GMT, Dec 4, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Ravivarman
24474673_1510392995682316_1133220643_o

அம்பாறை, அட்டப்பளம் தமிழ் கிராமத்தின் மயானபூமியைத் தனியார் ஒருவர் அபகரிக்கப்பட்ட முற்பட்டார் என தெரிவித்து அக்கிராம மக்கள் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அட்டப்பளம் கிராமத்தில் வாழும் 280குடும்பங்கள் தங்களது பூர்வீக மயானபிரதேசமாக கடற்கரையை அண்டிய குறித்த பிரதேசத்தில் உள்ள 14ஏக்கர் காணி நிலப்பரப்பையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதற்கான போதிய ஆதாரங்களாக பல வருடங்களுக்கு மேலாக இங்கு புதைக்கப்பட்டவர்களின் கல்லறைகள் இன்றும் காணப்படுவதை குறிப்பிடலாம்.

இந்நிலையில் குறித்த நபர் ஏற்கனவே 12 ஏக்கருக்குரிய அனுமதிப்பத்திரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து மயானத்தை சுற்றி புதைகுழிக்கு மேலாக வேலியும் இட்டு மயானத்தின் மத்தியபகுதியினூடாக வீதியையும் அமைத்து வீதியை மறித்து கதவினையும் போட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் த.இராஜசேகர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்து மக்களின் மயானத்தை தனியார் ஒருவர் அபகரிப்பதாக எனக்கு நேற்று தகவல் கிடைத்தது. தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே பல சந்திப்புக்கள் இடம்பெற்று சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸார் இன்று வருகை தந்து விடயங்கள் குறித்து ஆராய முற்படும் போதே குறித்த நபர் தனது கல்வி நிலைக்கு அப்பால் மிகவும் கேவலமான முறையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டார்.  அத்தோடு அரச அதிகாரியான என்னை பொலிசாருக்கு முன்னிலையிலே அச்சுறுத்தியும் சென்றுள்ளார்.

இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இங்கு கடடையாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பில் இன்று பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்யவுள்ளேன்.

இச்சந்தர்ப்பத்தில் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உரிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் அதுவரையில் யாரும் குறித்த நிலப்பரப்பிற்குள் செல்ல கூடாது என அறிவுறுத்தல் வழங்குமாறும் பொலிசாரை நான் கேட்டுள்ளேன்” என கிராம உத்தியோகத்தர் த.இராஜசேகர் தெரிவித்தார்.

24740157_1510392985682317_1832044404_o 24726301_1510393049015644_1346877824_o 24581129_1510393155682300_900285653_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)