Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கு நிதியுதவி!

In இலங்கை
Published: 16:10 GMT, Dec 4, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Ravivarman
v3

மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரனால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் குறித்த பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிக்கு பா.டெனிஸ்வரன் விருந்தினராக சென்றிருந்தவேளை அப்பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கு உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இதற்கமைவாக தனது இவ்வருடத்திற்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து ரூபாய் 150,000.00 ஒதுக்கீடு செய்து அவ்வேலைகள் முடிவடைந்த நிலையில் அதற்கான காசோலையினை இன்று உத்தியோகபூர்வமாக பாடசாலையின் அதிபர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இத்தருணத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் பா.டெனிஸ்வரனால் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கு கடந்த வருடங்களிலும் பல உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது அப்பாடசாலையில் பயிலும் உயர்தர மாணவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததோடு அது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

v5 v4 v1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)