Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனுக்கே அச்சமடையாத நான் ஒருபோதும் மண்டியிட மாட்டேன்: மஹிந்த

In இலங்கை
Published: 03:27 GMT, Dec 5, 2017 |
0 Comments
3041
icon_com
This post was written by : Puvanes

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே அச்சமடையாத நான், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் முன் மண்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் பொதுஜன முன்னணி நேற்று மாலை நடத்திய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சமகால அரசாங்கத்திற்கு தான் எப்போதுமே அச்சமடையப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள மஹிந்த, நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொண்டு அதிகார அடக்குமுறைகளையும், கடும்போக்கான செயற்பாடுகளையும் செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தான்தோன்றித்தனமான முறையற்ற செயற்பாடுகளை கடைபிடிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய மஹிந்த, அரசாங்கத்திற்கு இவ்வாறு செயற்பட வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)