Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று

In இந்தியா
Published: 04:20 GMT, Dec 5, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Elakkiya

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அதனை முன்னிட்டு சென்னை மெரீனாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுள்ளனர். இதன்காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காமராஜர் வீதியூடாக பேரூந்துகள் செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் அமைதி ஊர்வலம் முன்னெடுக்கப்படுகின்றது. இன்றைய தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்கும் வகையில் கருப்புநிறஆடை  அணிந்து பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இதன்காரணமாக 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கருதி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த பெண் முதலமைச்சர்கள் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கிய ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுவதாக பொதுமக்கள் தரப்பிலும் அரசியல் தரப்பிலும் கூறப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)