Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் மீண்டும் வாள்வெட்டு அட்டகாசம்! – இருவர் படுகாயம்

In இலங்கை
Updated: 11:45 GMT, Dec 5, 2017 | Published: 04:13 GMT, Dec 5, 2017 |
0 Comments
1964
icon_com
This post was written by : Puvanes

யாழ். சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு மீசாலை கிழக்கு – மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (வயது 20) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அதே அறுவர் கொண்ட வாள்வெட்டுக் குழு மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் கெரம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீதும் வாள்வெட்டுகளை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த அல்பிரட் டிலச்சன் (வயது17) என்ற இளைஞர் காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பொலிஸார் முன்னெடுத்த அதிரடி செயற்பாடுகளைத் தொடர்ந்து வாள் வெட்டுக்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சில நாட்கள் இவ்வாறான சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)