Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: புதிய மாற்றங்களுடன் இலங்கை அணி அறிவிப்பு!

In கிாிக்கட்
Published: 04:37 GMT, Dec 5, 2017 |
0 Comments
2676
icon_com
This post was written by : Anojkiyan
thir

இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான திசர பெரேரா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சந்திமால், குசல் மெண்டிஸ், கபுகெதர, சீக்குகே பிரசன்ன, மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் லசித் மாலிங்கவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அணிக்கு வலுசேர்க்கும் வகையில் அசேல குணரத்ன மற்றும் தணுஷ்க குணதிலக ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் சச்சித பத்திரன ஆகியோருக்க அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விபரம் பின்வருமாறு:

திசர பெரேரா (அணித்தலைவர்), உபுல் தரங்க, தணுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, லஹிரு திரிமான்ன, அஞ்சலோ மத்தியூஸ், அசேல குணரத்ன, சத்துரங்க டி சில்வா, சச்சித் பத்திரன, அகில தனஞ்சய, ஜெப்ரி வண்டசே, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)