Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்திரிக்காய் – மொச்சை பிரட்டல்

In
Updated: 04:36 GMT, Dec 5, 2017 | Published: 04:36 GMT, Dec 5, 2017 |
0 Comments
1064
icon_com
This post was written by : Risha
201712041211252502_Mochai-Kathirikai-poriyal_SECVPF
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய்  – அரை கிலோகிராம்,
பச்சை மொச்சை – 100 கிராம்,
வெள்ளை பூடு – 10 பல்,
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி,
சின்ன வெங்காயம்
தக்காளி – 4,
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி மற்றும் வெள்ளை பூடு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மொச்சையை வேக வைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம்  போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கிய கத்தரிக்காயை  சேர்த்து, நன்றாக வதக்கவும்.
பின்னர் அதில் வேகவைத்த மொச்சையை போட்டு அரை கோப்பை  நீர் விட்டுக் கிளறி சற்றுநேரம் வேகவைத்து இறக்கவும்.
இதேவேளை, மற்றொரு பாத்திரத்தில்  மீதமுள்ள எண்ணெயை ஊற்றி  அரைத்து வைத்துள்ள இஞ்சி, வெள்ளை பூடு  உப்பு, மஞ்சள்தூள்,  மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி  கத்திரிக்காய் – மொச்சை கலவையில் சேர்த்துக் கலக்கவும். பின்னர் அதன்மேல் கொத்தமல்லி தழைகளை தூவி விடவும்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)