Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை

In உலகம்
Published: 04:41 GMT, Dec 5, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Suganthini
isr

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்குமிடையில் பேச்சுவார்த்தைக் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டுமெனவும், ட்ரம்ப்புக்கு     மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும், ஜெருசலேமை தமது நாடுகளின் தலைநகரமென்று கூறி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்து  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  நாளை (புதன்கிழமை)  அறிவிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் (3ஆம் திகதி) செய்தி வெளியாகியிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்தத் தீர்மானத்துக்கு, ஜோர்டான், துருக்கிய ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் இந்த அறிவிப்பைத் தடுக்கும் நோக்கில் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடனும் கலந்துரையாடியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)