Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாடுவாரா?

In கிாிக்கட்
Updated: 04:54 GMT, Dec 5, 2017 | Published: 04:54 GMT, Dec 5, 2017 |
0 Comments
1285
This post was written by : Anojkiyan

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் வரை விளையாடுவேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ்  சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யுனிசெஃப் நடத்திய நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 17 வருடமாக தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன். கடந்த மூன்று உடல்தகுதி சோதனையில் தோல்வி அடைந்தேன். ஆனால், இப்போது இறுதியாக அதில் தேறி இருக்கிறேன். தோல்விகளை கண்டு நான் பயப்படவில்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்தித்தவன் நான். வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தோல்வி அடைய வேண்டும். நீங்கள் வெற்றிபெற்ற மனிதராக இருக்க வேண்டும் என்றால் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதுதான் உங்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.

நான் இப்போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த விதமான போட்டியில் விளையாடப் போகிறேன் என்று தெரியவில்லை. வயதாகிக்கொண்டு இருப்பதால் என்னை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கிறேன்” என கூறினார்.

35 வயதாகும் யுவராஜ் சிங், இறுதியாக சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg