Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை தாக்குதல்- கைதியின் மரணதண்டனையை இடைநிறுத்துமாறு உத்தரவு

In இந்தியா
Updated: 06:33 GMT, Dec 5, 2017 | Published: 06:33 GMT, Dec 5, 2017 |
0 Comments
1214
This post was written by : Elakkiya

மும்பை தாக்குதல் வழக்கின் கைதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இடைநிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை நகரை இரத்த பூமியாக மாற்றிய தொடர்குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தாகிர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனையும் அபு சலீம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தாகிர் மெர்ச்சண்ட உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கைதியின் மரணதண்டனையை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், மும்பை தடா நீதிமன்றின் சாட்சியங்களின் ஆவணங்களை எதிர்வரும் ஆறு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறும் அதன் பிரதியை மனு தாரருக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி 13 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 728 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg