Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆபத்து தொடர்பாக சர்வதேசத்தின் முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்தது ஏன்: நாடாளுமன்றில் கேள்வி

In இலங்கை
Updated: 05:05 GMT, Dec 5, 2017 | Published: 05:01 GMT, Dec 5, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Puvanes
dinesh001

இயற்கை அனர்த்தம் தொடர்பில் சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது ஏன் என, கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையில் கீழ் உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

நாடுமுழுவதும் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, இதுவரையில் 14 பேர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளது.

இவ்வாறான இயற்கை அனர்த்தம் ஏற்படும் என ஏற்கனவே முன்று தினங்களுக்கு முன்னராக சர்வதேச ரீதியில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும் அவற்றினை அரசாங்கம் உதாசீனப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ஏன் இவ்வாறு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன? எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படுமா? எதிர்வரும் நாட்களிலும் இவ்வாறான அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதற்கான முன்னேற்பாடுகள் யாவை?

அதேபோன்று சில மாதங்களுக்கு முன்னர் சலாவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார் அந்த உறுதிமொழியும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)