Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை-மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை வெளியீடு!

In கிாிக்கட்
Published: 05:43 GMT, Dec 5, 2017 |
0 Comments
1802
icon_com
This post was written by : Anojkiyan
CRICKET-SRI-WIS

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, போட்டி அட்டவணையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இத்தொடரின் மூலம், இரு அணிகளும் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது பலத்தினை சோதனை செய்யவுள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, அடுத்த ஆண்டு ஜூன் 6-10ஆம் திகதி டிரினிடாட், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடுத்த ஆண்டு ஜூன் 14-18ஆம் திகதி பார்படோஸ், கேன்சிங்டன் ஓவல் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டிஅடுத்த ஆண்டு  ஜூன் 23-27ஆம் திகதி சென்ட். லூசியா, டேரன் சமி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 1-1 என சமநிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)