Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுக்கு ஐ.நா. அதிகாரி விஜயம்

In உலகம்
Published: 05:10 GMT, Dec 5, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அந்நாட்டுக்கு ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ஜெப்ரி ஃபெல்ட்மன் (Jeffrey Feltman) விஜயம் செய்கின்றார்.

வடகொரியாவுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்லும் அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அங்கு தங்கியிருந்து உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி ஜொங் ஹோ (Ri Yong Ho) மற்றும் உப வெளிவிவகார அமைச்சர் பாக் மயோங் குக்  (Pak Myong Guk) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

வடகொரியாவுடன் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில், உயர்மட்ட அதிகாரிகளுடன் இவரது சந்திப்பு அமையவுள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான ஜெப்ரி ஃபெல்ட்மனுக்கு, நீண்டகாலமாக வடகொரிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அழைப்பின் பேரிலேயே, வடகொரியாவுக்கு இவர் விஜயம் செய்வதாகவும், ஐ.நா. கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)