Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ இறந்து ஓர் ஆண்டு

In உலகம்
Published: 05:17 GMT, Dec 5, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : JudeDanish

கியூபா ஜனாதிபதி ராகுல் காஸ்ட்ரோ, சண்டியாகோவில் அமைந்துள்ள பிடல் காஸ்ட்ரோவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட ஓர் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் கியுபாவில் இடம்பெற்றுவரும் நிலையில், ராகுல் காஸ்ட்ரோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அரசாங்க உயரதிகாரிகளுடன் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள சண்டா இபிஜினியாவிற்கு சென்ற ராகுல் காஸ்ட்ரோ, வெள்ளை ரோஜா வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.இந்த நிலையில் இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. இதேவேளை தலைநகரில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை தேசத்தின் தந்தை, புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமது மரியாதையையும், அஞ்சலிகளையும் வழங்கியிருந்தனர்.
அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கியுபாவில் கொமுனிச சித்தாந்த்ததை வளர்த்தெடுத்து, அமெரிக்காவிற்கு அடிபணியாது ஆட்சி புரிந்த இரும்பு மனிதனாக பிடல் காஸ்ட்ரோ மக்களால் பார்க்கப்படுகின்றார்.

அமெரிக்காவின் பல்வேறு கொலை சதிகளையும் முறியடித்து, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியேழுப்பிய பிதாமகனாக பிடல் இன்றும் மக்களின் மனங்களில் வாழ்ந்துவருகின்றார்.

1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்த பிடல், தனது 90 வது வயதில் 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 25 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அமெரிக்காவின் அடிமைத்தனத்தினை எதிர்த்து 49 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிடல் காஸ்ட்ரோ, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியினை தனது இளைய சகோதரரான ராகுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)