Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிரியர் ஊதிய அதிகரிப்பு குறித்த பிரேரணை நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 12:25 GMT, Dec 5, 2017 | Published: 05:21 GMT, Dec 5, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Risha

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய அதிகரிப்பு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் இன்றைய 111ஆவது அமர்வின்போது, வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி மாகாண சபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் பிரேரணையொன்றை முன்மொழிந்தார்.

அதன்படி குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், ”தற்போது 6 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2018ஆம் ஆண்டில் இருந்து அந்த சம்பளம் முழுமையாக கிடைக்கும். இருந்தும், சம்பளத்தினை அதிகரிக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அரசாங்கத்திடம் அவ்வளவு நிதி இருக்குமா என்பது சந்தேகம், இருந்தாலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பரிசீலணை செய்வோம்” என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் முன்பள்ளிகள் நடாத்தப்படுகின்றன. இராணுவத்தினைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அது தவறானது. வடமாகாணத்தில் இவ்வாறான கட்டமைப்புக்கள் இருக்க முடியாது. எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் என உறுப்பினர் ஆர்னல்ட் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்துறைத் திணைக்களத்தினை அழைத்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பிலும், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுமாறு முதலமைச்சரிடம் எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா வலியுறுத்தினார்.

இவ்வாறு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளூராட்சி அமைச்சின் கட்டுப்பாட்டில் வருவதனால், உள்ளுராட்சி அமைச்சர் அவற்றினைக் கையாள வேண்டுமென்று தெரிவித்து, முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பதற்கான பிரேரணையினை சபை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபை அமர்வு: ஆசிரிய ஊதிய அதிகரிப்பு குறித்து பிரேரணை

வடமாகாண சபையின் 111ஆவது அமர்வு, பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம், வடக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளின் மாத ஊதியத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு அத்திவாரமாக விளங்கும் முன்பள்ளிகளில் பணியாற்றும் வடமாகாண ஆசிரியர்களுக்கு மிக நீண்டகாலமாக குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியே இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வடமாகாண சபையால் வழங்கப்படும் 4 ஆயிரம் ரூபாவானது, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த போதுமானதல்ல. எனவே, அவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் சபையை இன்று வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

IMG-3879 IMG-3882 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)