Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரி, ரணிலுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு! – அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

In இலங்கை
Updated: 05:48 GMT, Dec 5, 2017 | Published: 05:48 GMT, Dec 5, 2017 |
0 Comments
2211
This post was written by : Puvanes

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில், அப்போதைய ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மஹிந்த அரசாங்கத்தில் இணைந்துகொண்டு இரண்டு வாரங்கள் அமைச்சர் பதவியிலும் இருந்தார்.

அப்போது ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உள்ளதாகவும் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்து வந்துள்ளார்.

இதன்காரணமாக ரணில் மற்றும் மைத்திரிபால சிரிசேன தரப்பு இணைந்து திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்கு ஒன்றினை மேல்நீதிமன்றில் தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு நேற்று நீதிபதி விகும் களுஆராச்சியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதமரும், ஜனாதிபதியும் நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் உள்ளதாக அவர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எனினும் நீதிபதி அடுத்த தவணையின் போது வழக்குடன் தொடர்புடைய ஜனாதிபதியும், பிரதமரும் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க முடியாத நிலையிலும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு சரியானதா? குறித்த தினத்தில் அவர்களால் மன்றில் முன்னிலையாக முடியுமா? என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட வாதப்பிரதிவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg