Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா: பெயர்ப் பலகையை பிடுங்கி எறிந்த மர்மநபர்கள்

In இலங்கை
Published: 05:50 GMT, Dec 5, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Risha

மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட கிளிநொச்சி- கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் தேசமாக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சி பிரதேச சபையினால் நேற்று (திங்கட்கிழமை) இந்த பெயர்ப் பலகை போடப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவே இது சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை கரைச்சி பிரதேச சபையினால் நடப்பட்டது.

குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனினால் 10 லட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1512451097553 20171205_094926

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)